Sai Pallavi
Sai Pallavi

Sai Pallavi : பிரேமம் படத்தின் மூலம் தென்னக மொழி ரசிகர்களிடம் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் சாய் பல்லவி.

தமிழில் இவர் நடித்த தியா, மாரி 2 போன்ற படங்கள் தோல்வியடைந்தாலும் இவருக்கு இன்றும் தமிழகத்தில் ஒரு கிரேஸ் உண்டு.

அதே போல் மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் அங்கும் இவரை ஒரு முன்னணி நடிகையாகவே பார்க்கிறார்கள்.

அப்படிப்பட்டவர் ஒரு சின்ன இடைவெளிக்கு பிறகு மலையாளத்தில் அதிரன் படத்தின் மூலம் கம்பேக் கொடுக்கிறார்.

இதில் பஹத் பாசில் ஹீரோவாக நடிக்கிறார்.இவர்கள் ஜோடி முதல் முறையாக இணைந்துள்ளதால் இப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர்.

ஆனால் அண்மையில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது.

இதில் சாய் பல்லவி பேயாக நடித்திருப்பதும் மேலும் துளி கூட ரொமான்ஸ் இல்லாததும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு மலையாளத்திற்கு வரும் சாய் பல்லவி இப்படி ஒரு படத்திலா நடிப்பார் என மலையாள ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.