Sachin Tendulkar Fans
Sachin Tendulkar Fans

Sachin Tendulkar Fans – இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என கூறப்படும் சச்சின் அவர்களின் சிறுவயது பயிற்சியாளர் ராமகாந்த் ஆச்ரேகர் நேற்றைய முன்தினம் காலமானார்.

இவர் சச்சின் மட்டும் இன்றி வினோத் காம்ப்ளி, சந்திரகாந்த் பண்டிட், சஞ்சய் பாங்கர், பிரவீன் ஆம்ரே, ரமேஷ் பவார், அஜித் அகர்கர் ஆகியோருக்கு சரியான பயிற்சி அளித்து அவர்களுடைய திறமையை வெளியே கொண்டு வர முக்கியம் காரணமாக இருந்தவர்.

கடந்த சில நாட்களாக உடல் நலமின்றி இருந்த ராமகாந்த் நேற்று முன்தினம் மரணமடைந்தார். நேற்று அவருக்கு இறுதி சடங்கு நடைபெற்றது.

அப்போது, ஆச்ரேகர் உடல் வைக்கப்பட்டு ஸ்ட்ரைக்ச்சரை சச்சின் தனது தோளில் சுமந்து சென்று இறுதி மரியாதை செய்தார்.

சச்சினின் இந்த செயல், எல்லோரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது. தனக்கு வாழ்க்கை அமைத்து கொடுத்த குருவிற்கு சச்சின் மட்டும்மின்றி வினோத் காம்ப்ளியும் மரியாதை செலுத்தினார்.

கடந்த 2010-ஆம் ஆண்டு துரோணாச்சாரியர் விருதும், அதே ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் பெற்றவர் ராமகாந்த் ஆச்ரேகர் என்பது மறக்க முடியாது.