விஜயின் கண் முன்னே தனக்கு நடந்த இரண்டாவது திருமணம் பற்றி பேசியுள்ளார் எஸ் ஏ சந்திரசேகர்.

தென்னிந்திய சினிமாவில் இயக்குனர்களின் ஆலமரமாக விளங்கி வருபவர் எஸ் ஏ சந்திரசேகர். இவருடைய முகம் தான் இன்றைய திரையுலகில் டாப் ஸ்டார் ஆக இருந்து வரும் தளபதி விஜய் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தற்போது விஜய் மற்றும் எஸ் ஏ சி என இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பேசிக்கொள்ளாமல் இருந்து வருகின்றனர்.

விஜயின் கண் முன்னே SAC-க்கு நடந்த இரண்டாவது திருமணம் - அவரே வெளியிட்ட தகவல்.!!

இப்படியான நிலையில் எஸ் ஏ சந்திரசேகர் யார் இந்த எஸ் எஸ் சி என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள யூடியூப் பக்கத்தில் தனக்கு விஜய் கண் முன் நடந்த இரண்டாவது திருமணம் பற்றி பேசியுள்ளார்.

அதாவது தனக்கும் தனது மனைவிக்கும் இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் நடந்தது. ஆனால் இருவரும் இந்து கிறிஸ்து என வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் என்னுடைய மனைவி விஜய்க்கு 6 வயது இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதுவும் கிறிஸ்தவ முறைப்படி செய்து கொள்ள வேண்டும் என கூறினார். அப்போது அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார். விஜய்க்கு ஆறு வயதாக இருக்கும்போது இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டோம் என தெரிவித்துள்ளார்.

விஜயின் கண் முன்னே SAC-க்கு நடந்த இரண்டாவது திருமணம் - அவரே வெளியிட்ட தகவல்.!!

மேலும் இவர்களின் திருமண புகைப்படம் மற்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.