
சபரிமலையில் ஐயப்பன் கோயிலின் நடை இன்று திறக்கப்படுவதால் கடும் பதற்றம் நிலவி வருகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இளம்பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், ஐப்பசி மாத பூஜைக்காக இன்று கோவில் நடை திறக்கபட உள்ளது. இதனால் கேரளாவில் பதற்றம் நிலவி வருகிறது.
மலைப்பகுதிகளில் மக்கள் முற்றுகையிட்டு, கோவிலுக்கு வரும் பெண்களை பாதியிலேயே தடுத்து நிறுத்துகின்றனர்.
சபரி மலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு எதிராக, கேரளா உட்பட பல மாநிலங்களில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கேரளாவில் பெண்கள் அனுமதிக்க பலத்த எதிர்ப்பு தெரிவித்து, நாள்தோறும் போராட்டங்கள், பேரணிகள், ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கான பெண்களும் கலந்து கொண்டுள்ளனர்.
திருவனந்தபுரத்தில் நேற்று தேவசம்போடு பேச்சுவார்த்தை நடத்தியது, ஆனால் அதில் ஒத்துழைக்காத அனைவரும் கூட்டத்தை புறக்கணித்து சென்றனர்.
இந்த பரபரப்பான நேரத்தில் முதல்வர் பிரனாய் விஜயன் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டத்தில், உச்ச நீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்த அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்.
ஐயப்ப பக்தர்களை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை, யாராவது பெண் பக்தர்களை தடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் வாகனங்களில் ஏறி சோதனை செய்ய யாருக்கும் அதிகாரம் இல்லை எனவும் கூறினார்.