பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சென்ற பெண் பத்திரிக்கையாளர் கவிதா மற்றும் கொச்சியை சேர்ந்த மாடல் ரஹானா பாத்திமா சன்னதிக்கு செல்லும் வழியில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பபட்டனர்.
இந்நிலையில் பம்பைக்கு வந்த கவிதா செய்தியாளர்களிடம் கூறியதாவது, எங்களுக்கு ஆதரவு அளித்ததற்கு நன்றி. சபரிமலை வந்ததை பெருமையாக உணர்கிறோம், நாங்க எப்படி ஒரு ஆபத்தான சூழலை சந்தித்தோம் என்பதை நீங்களே பார்த்திருப்பீர்கள் என்றார்.
ரஹாணா பாத்திமா கூறுகையில், ” பக்தர்கள் அல்லாதவர்கள், அமைதியை சீர்குலைக்க எண்ணியவர்களே எங்களை சன்னதி உள்ளே அனுமதிக்கவில்லை. ஒருவரை எந்த வகையில் பக்தர் என்று நீங்கள் கூறுகிறீர்கள்? முதலில் இதை நீங்கள் சொல்லுங்கள் பிறகு நான் பக்தரா இல்லையா என்பதை நான் சொல்கிறேன். எங்களை உள்ளே அனுமதிக்காததன் காரணத்தை அறிந்து கொள்ள விரும்புகிறேன்.
மேலும், என் குழந்தைக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை, என் உயிர்க்கும் ஆபத்து உள்ளது. எனக்கு பாதுகாப்பு அளிப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆகையால் தான் நான் திரும்பி செல்கிறேன்” இவ்வாறு அவர்கள் கூறினர் .