
சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த உத்தரவை ஏற்று கேரள அரசும், திருவிதாங்கூர் தேவச போர்டும் அனைத்து வயது பெண்களுக்கும் தேவையான வசதிகளை செய்ய அதற்கான பணிகளை செய்ய துவங்கி உள்ளன.
ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து கேரளாவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் நாள்தோறும் பேரணி நடத்தி வருகின்றனர். மேலும் சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரளாவை போன்று தமிழகத்திலும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஊட்டி, திருப்பூர், பழனி, திண்டுக்கல், மதுரை ஆகிய இடங்களில் ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் பேரணி நடைபெற்றது வருகிறது. தமிழகத்தில் பல இடங்களில் இந்த தீர்ப்பை எதிர்த்து போராட்டம், பேரணி, மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.