பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய பின் முதல் முறையாக ரோஷ்நி ஹரிப்ரியன் அவரது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Roshini Haripriyan Photos After Bharathi Kannamma Serial : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் அருண்பிரசாத் என்பவர் நாயகனாக நடிக்க நாயகியாக ரோஷினி ஹரிப்ரியன் என்பவர் நடித்து வந்தார். ஆனால் அவர் சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகிக்கொண்டார். இதனையடுத்து தற்போது அவருக்கு பதிலாக வினுஷா என்பவர் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் இருந்து விலகிய ரோஷினி தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதன் பிறகு அவர் எந்த ஒரு பதிவையும் சமூக வலைதளங்களில் பதிவு செய்யவில்லை. இந்த நிலையில் தற்போது ரோஷினி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் சீரியலில் இருந்து விலகிய பிறகு முதல் முறையாக அவரது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பத்மாவதி தாயார் கோவில் : இன்று பஞ்சமி தீர்த்தம், நாளை புஷ்ப யாகம்

அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன. ‌‌

ஜெயில் படம் எப்படி இருக்கு? – Stars Review | Arjun Das, Adhik, Ravi Mariya | G.V.Prakash, Abarnathy‌‌