Rohit Sharma vs Australia
Rohit Sharma vs Australia

Rohit Sharma vs Australia – ரோகித் சர்மா பேட்டிங் செய்ய வரும் போது அவரின் கவனத்தை மாற்றும் வகையில் லயன் பந்தில் சிக்ஸ் அடித்தால் நான் மும்பை அணிக்கு மாறிவிடுவேன் என்று டிம் பெய்ன் சொல்லியுள்ளார்.

ஆஸ்திரேலியா – இந்தியா இடையே 3-வது டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்றது. அதன் 2-வது நாள் போட்டியில் ரோகித் சர்மா பேட்டிங் செய்ய வந்தார்.

அப்போது அவரது கவனத்தை திசைதிருப்பும் வகையில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மற்றும்,

விக்கெட் கீப்பருமான டிம் பெய்ன் ஐபிஎல் தொடரை குறிப்பிட்டு ஆரோன் பிஞ்சியிடம் சொல்லி சர்மாவை சீண்டி உள்ளார்.

ரோகித் சர்மா பேட்டிங் செய்யும் போது, நாதன் லயன் பந்து வீசினார்.

அப்போது, டிம் பெய்ன் ரோகித் சர்மாவை நோக்கி “எனக்கு ராயல் சேலஜ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டி உள்ளது.

நீங்கள் லயன் பந்தில் சிக்ஸ் அடித்தால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறி விடுகிறேன் ” என்றார்.