யாரு படம் வந்தாலும் எங்க திரையரங்குகளில் தல அஜித் படம் மட்டும்தான் ஓடும் என பிரபல திரையரங்கு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

Rohini Theatre Owner About Valimai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒன்றாக இருந்து வருகிறது. மேலும் இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரசிகர்களுடன் உரையாடிய சென்னையில் உள்ள பிரபல திரையரங்கமான ரோகிணி தியேட்டர் உரிமையாளர் இந்த பொங்கலுக்கு யாருடைய படம் வெளியானாலும் எங்களுடைய தியேட்டரில் அனைத்து ஸ்க்ரீனிலும் அஜித் படம் மட்டும்தான் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

மாடல் அழகிகள் மர்ம மரணம் : 6 பேர் கைது..திடுக்கிடும் தகவல்கள்..

இவருடைய இந்த பதிவு அஜித் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

என் படம்னாலே பிரச்சனை பன்றாங்க! – Silambarasan Emotional Full Speech | Maanaadu Pre Release Event