அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ராக்கி படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

Rocky Movie Review : விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வசந்த் ரவி பாரதி ராஜா உட்பட பலர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் ராக்கி.

படத்தின் கதைக்களம் :

ரவுடிசம் செய்துவரும் பாரதிராஜாவுடன் இணைந்து இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார் வசந்த் ரவி. இந்த நிலையில் அவருக்கும் பாரதிராஜாவின் மகனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட வசந்த் ரவியின் அம்மா ரோகினி கொல்லப்படுகிறார். அம்மாவை கொன்றவனைப் பழி தீர்க்க பாரதிராஜாவின் மகனை கொன்று விடுகிறார் வசந்த் ரவி.

பழிக்குப் பழி.. பாரதிராஜா Vs வசந்த் ரவி - ராக்கி முழு விமர்சனம்

இதனால் ஜெயிலுக்கு சென்று வந்த அவர் திருந்தி வாழ முயற்சி செய்யும் நேரத்தில் அவரை கொன்றே தீரவேண்டும் என பாரதிராஜா முடிவெடுக்க அதன் பின்னர் என்னவெல்லாம் நடந்தது. இறுதியில் வசந்த் ரவி கொல்லப்பட்டாரா இல்லையா என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.

படத்தை பற்றிய அலசல் : பாசம், ஏக்கம், சண்டை என அனைத்திலும் வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளார் வசந்த் ரவி.

பழிக்குப் பழி.. பாரதிராஜா Vs வசந்த் ரவி - ராக்கி முழு விமர்சனம்

வில்லனாக பாரதிராஜா மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மகனைக் கொன்றவனை கொன்றே தீர வேண்டும் என்பது பாசத்தின் உச்சம்.

படத்தில் நடித்துள்ள மற்ற கதாபாத்திரங்கள் அனைவருமே சிறந்த நடிப்பை கொடுத்துள்ளனர்.

தர்புகா சிவாவின் இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

பழிக்குப்பழி வாங்கும் கதையாக இருந்தாலும் வித்தியாசமான திரைக்கதையால் அனைவரையும் கவர்ந்துள்ளார் அருண் மாதேஸ்வரன்.