கிளி வளர்த்ததால் சர்ச்சையில் சிக்கிய ரோபோ சங்கர் குறித்த அதிர்ச்சி தகவல் வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் முன்னணி காமெடி நட்சத்திரமாக வலம் வருபவர் ரோபோ சங்கர். இவர் ஊறிய அனுமதி பெறாமல் வீட்டில் அலெக்சாண்டர் கிளிகளை வளர்த்து வந்துள்ளார். இதன் காரணமாக ரோபோ சங்கர் வீட்டில் இருந்து அந்த கிளிகளை வனத்துறையினர் மீட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைத்துள்ளனர். மேலும் ரோபோ சங்கர் மற்றும் அவரது மனைவியையும் வனத்துறையினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். அதன் பிறகு இது குறித்து ரோபோ சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் அவர், தனது மனைவியின் தோழி பணி மாற்றத்தின் காரணத்தால் அந்த கிளிகளை அன்பளிப்பாக தங்களுக்கு கொடுத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் இந்த வகையான கிளிகளை வளர்க்க வனத்துறையினரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்பது தங்களுக்கு தெரியாது எனக் கூறி இதற்காக மன்னிப்பையும் கேட்டுள்ளார். இதனால் வனத்துறையினர் ரோபோ சங்கர் மீது வழக்கு எதுவும் பதியாமல் 2.5 லட்சம் ரூபாய் அபராதமாக விதித்துள்ளனர்.
அதன் பின்பு அபராதம் செலுத்திய ரோபோ சங்கர் இது குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட இருப்பதாக தெரிவித்திருக்கிறார். தற்போது இந்த தகவல் இணையதளத்தில் பரபரப்பாக வைரலாகி வருகிறது.