ரோபோ சங்கர் குச்சி போல் மெல்லிய காரணம் என்ன என அவரது மனைவி பிரியங்கா தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக காமெடி வேடங்களில் நடித்து வருபவர் ரோபோ சங்கர். விஜய் டிவியின் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான இவர் பழைய படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக நடித்திருந்தார்.

அதன் பிறகு விஜய் டிவி ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமடைந்து மாரி 2, வேலைன்னு வந்து வெள்ளைக்காரன், விஸ்வாசம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது சில தினங்களுக்கு முன்னர் ரோபோ சங்கர் உடல் எடை குறைந்து குச்சி போல் மெலிந்து காணப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன. அவரது இந்த எடை குறைப்புக்கு காரணம் உடல்நல குறைபாடா என ரசிகர்கள் கவலையடைந்தனர்.

ஆனால் அவரது உடல் எடை குறைப்புக்கு காரணம் தற்போது நடித்து வரும் படம் தான் என தெரிவித்துள்ளார் ரோபோ சங்கர் மனைவி பிரியங்கா. அவர் முழு உடல் ஆரோக்கியத்துடன் தான் இருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார்.