
ரோபோ சங்கர் இன்னும் உடல் எடை குறைந்து குச்சியாகி இருக்கும் புகைப்படம் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியின் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரோபோ சங்கர். சின்னத்திரை மூலம் கிடைத்த புகழைத் தொடர்ந்து பல படங்களில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் சமீபத்தில் மோசமான அளவிற்கு உடல் எடை குறைந்து ஒல்லியாக இருந்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. ரோபோ சங்கருக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டது உண்மைதான் என சீரியல் நடிகரும் அவரின் நண்பருமான போஸ் வெங்கட் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் தமிழ் புத்தாண்டு தினத்தில் அப்பாவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.
இந்த புகைப்படத்தில் ரோபோ சங்கர் மேலும் உடல் மெலிந்து ஒல்லியாக காணப்படுவது ரசிகர்களை மேலும் அதிர்ச்சடைய செய்துள்ளது. அதோடு ரோபோ சங்கர் மனைவி பிரியங்காவும் உடல் மெலிந்துள்ளார்.

ரசிகர்கள் ஏன் இப்படி ஒல்லியாகிக் கொண்டே போகிறார் என இந்த புகைப்படத்தை பார்த்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.