Web Ads

மதுரை பின்னணியில் உருவாகும் ‘செவல காள’ படத்தின் அப்டேட்ஸ்..

Web Ad 2

மதுரை பின்னணியில் உருவாகும் ‘செவல காள’ படத்தில் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நாயகனாக நடிக்கிறார். விங்ஸ் பிக்சர்ஸ் என்ற புதிய நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி பால் சதீஷ் இயக்குகிறார்.

இதில் நாயகியாக மீனாட்சி ஜெய்ஸ்வால் நடிக்கிறார். சம்பத் ராஜ், ஆர்யன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஆர்.ராஜாமணி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு பிரித்வி இசையமைக்கிறார். இப்படம் பற்றி இயக்குநர் பால் சதீஷ் கூறும்போது,

’25 வருடங்களுக்கு முன் உதவி இயக்குநராகச் சேர சில இயக்குநர்களிடம் முயற்சித்தேன். யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் குறும்படங்கள் இயக்கிய அனுபவத்தின் மூலம் இப்படத்தைத் தயாரித்து இயக்குகிறேன்.

தனக்குத் தவறு என்று பட்டால் அதை யார் செய்தாலும் அவர்களைத் தண்டிக்கத் தயங்காதவன் நாயகன். மதுரை அருகே ஒரு கிராமத்தில் வாழும் நாயகனின் அண்ணனை, ஊரையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பணக்காரர் அவமானப்படுத்துகிறார். நாயகனான தம்பி அதற்கு என்ன செய்கிறார் என்பது கதை. ராபர்ட் மாஸ்டரை இதுவரை வேறு மாதிரி பார்த்துவிட்டோம். இதில் வேஷ்டி கட்டிய கிராமத்து இளைஞராக நடித்திருக்கிறார். இந்த கேரக்டர் தனக்குப் புதிதாக இருக்கிறது என்று அவரே சொன்னார்.

ஆகசன் காட்சிகளும் மிரட்டலாக இருக்கும். நாயகியாக மீனாட்சி ஜெய்ஸ்வால் நடித்துள்ளார். படத்தின் கதாபாத்திரத்துக்குச் சரியாகப் பொருந்தி இருக்கிறார். கதையில் அவருக்கும் முக்கியத்துவம் உள்ளது. ஆக்சன், காதல், நகைச்சுவை, சென்டிமென்ட் ஆகிய அம்சங்களுடன் படம் உருவாகிறது. முதல் ஷெட்யூல் மதுரை மேலூரில் நடந்துள்ளது. அடுத்த கட்டப்படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது’ என்றார்.

robert master in sevala kaalai movie story
robert master in sevala kaalai movie story