பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் தினேஷ் சொன்னது போலவே செய்துள்ளார் ராபர்ட் மாஸ்டர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி எட்டாவது வாரத்தில் அடி எடுத்து வைத்துள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து ராபர்ட் மாஸ்டர் வெளியேற்றப்பட்டார்.

அப்போதே கணித்த தினேஷ்.. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ராபர்ட் மாஸ்டர் செய்த வேலை - இத நோட் பண்ணீங்களா?

இவர் ரக்ஷிதாவின் பின்னாடியே திரிந்தது தான் இவரது வெளியேற்றத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. எப்படியும் இந்த வாரம் வெளியேறி விடுவோம் என தெரிந்து கொண்ட ராபர்ட் மாஸ்டர் தொடர்ந்து ரட்சிதாவிடம் போன் நம்பர் கேட்டுக் நச்சரித்துக் கொண்டே இருந்தார்.

இந்த நிலையில் ரட்சிதாவின் கணவர் தினேஷ் ராபர்ட் மாஸ்டர் வெளியே வந்ததும் நானும் ரட்சிதாவும் நட்பாக தான் பழகினோம் எங்களுக்குள் வேறு எதுவும் இல்லை. வெளியில் அது தவறாக தெரிந்திருக்கிறது என பேசுவார் என்று கேட்டு ஒன்றில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி ராபர்ட் மாஸ்டர் அப்படியே பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ரக்ஷிதா மனதுக்குள் இருக்கும் கவலையை யாரிடமாவது சொல்ல வேண்டும் என அவதிப்பட்டு கொண்டிருந்தார் அப்போதுதான் நான் அவரிடம் பேசத் தொடங்கினேன். எங்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருக்கிறது என பேசி உள்ளார்.

அப்போதே கணித்த தினேஷ்.. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ராபர்ட் மாஸ்டர் செய்த வேலை - இத நோட் பண்ணீங்களா?

மேலும் அசீம், விக்ரமன் உள்ளிட்டர் நான் வெளியில் தெரிய வேண்டும் என்பதற்காகவே சில விஷயங்களை செய்து வருவதாக கூறியுள்ளார். நிறைய பேட்டிகள் அளிப்பேன் அதில் நிறைய விஷயங்களை பேசலாம் என ராபர்ட் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.