என்னுடைய ஆதரவை இவருக்கு தான் என ஓட்டு போட்டு அறிவித்துள்ளார் ராபர்ட் மாஸ்டர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு கடந்த வாரம் வெளியேற்றப்பட்டவர் ராபர்ட் மாஸ்டர்.

என்னுடைய ஆதரவு இவருக்குத்தான்.. ஓட்டு போட்டு ஓப்பனாக அறிவித்த ராபர்ட் மாஸ்டர் - இந்த ட்விஸ்ட்ட எதிர்பார்க்கல.!!

பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது தொடர்ந்து ரக்ஷிதாவின் பின்னாடியே சுற்றி திரிந்து நெருக்கம் காட்டி வந்தார். மேலும் அவரிடம் போன் நம்பர் கேட்டுக்கொண்டே இருந்தார். ராபர்ட் மாஸ்டரின் இந்த நடவடிக்கைகளே அவருடைய வெளியேற்றத்திற்கு காரணமாக அமைந்தது.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும் தொடர்ந்து ரட்சிதாவுக்கு ஆதரவளித்தார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றுள்ள குயின்ஷிக்கு ஓட்டு போட்டு அதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பதிவு செய்துள்ளார். மேலும் பட்டுக்குட்டிக்கு ஓட்டு போடுங்க என ரசிகர்களிடம் குயின்ஷிக்கு ஆதரவாக ஓட்டு கேட்டுள்ளார்.

என்னுடைய ஆதரவு இவருக்குத்தான்.. ஓட்டு போட்டு ஓப்பனாக அறிவித்த ராபர்ட் மாஸ்டர் - இந்த ட்விஸ்ட்ட எதிர்பார்க்கல.!!

இவருடைய இந்த பதிவு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.