நடிகர் ஆர்.ஜே பாலாஜி சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஆர் ஜே பாலாஜி. ஆர் ஜே வாக பிரபலமான இவர் சிறந்த காமெடியனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு எல் கே ஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கி, கதாநாயகனாக நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி இருக்கும் இவரது நடிப்பில் தற்போது ‘ரன் பேபி ரன்’ திரைப்படம் வெளியானது.

இப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் ஆர்.ஜே பாலாஜி தனது சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக தகவல் இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அதன்படி முதலில் 4 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றிருந்த ஆர் ஜே பாலாஜி தற்போது இப்படத்தின் வெற்றியால் தனது சம்பளத்தை 7 கோடி ரூபாயாக உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.