Web Ad 2

பொங்கல் திருநாளில் கருப்பு படத்தின் அப்டேட் கொடுத்த ஆர்.ஜே பாலாஜி..!

பொங்கல் திருநாளில் கருப்பு படத்தில் அப்டேட் குறித்து பேசி உள்ளார் ஆர்.ஜே பாலாஜி.

RJ Balaji gave an update of Karupu movie on Pongal Thirunal..!
RJ Balaji gave an update of Karupu movie on Pongal Thirunal..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் படத்தின் இயக்குனரான ஆர்.ஜே பாலாஜி தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு அதில் படத்திற்கான அப்டேட்டையும் பகிர்ந்து உள்ளார்..

அதாவது முதலில் அவர் அவரது ஸ்டைலில் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை சொல்லிவிட்டு பொங்கல் திருநாளில் போஸ்டர் உடன் கருப்பு படத்தின் அப்டேட் வராது என்று கூறியுள்ளார். இதே மாதிரி தீபாவளி ரம்ஜான் குடியரசு தினம் என 473 போஸ்டரை விட்டுட்டோம் இன்னைக்கு எந்த போஸ்டரும் கிடையாது என்று ஜாலியாக கூறிய அவர் பிறகு இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியாகும் போது கண்டிப்பாக படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகும் என கூறியுள்ளார்.

கண்டிப்பாக உங்களுக்கு கருப்பு படம் புடிக்கும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். இவரின் இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by RJ Balaji (@irjbalaji)