முன்னறிவிப்பின்றி ராஜா ராணி சீரியல் குழு ஹீரோயினியை மாற்றியதாக தெரியவந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் நாயகி ஆகிய மனசு நடிக்க தொடங்கிய நிலையில் அவர் வெளியேறிய பிறகு அவருக்கு பதிலாக ரியா விஸ்வநாதன் நடித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த தினங்களுக்கு முன்னர் திடீரென அவர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஆஷா கவுடா நடிக்க தொடங்கியுள்ளார். இந்த ஹீரோயின் மாற்றம் குறித்து ரியா விளக்கம் அளித்துள்ளார்.

அதாவது எப்போதும் பதினைந்தாம் தேதியிலிருந்து 30-ம் தேதி வரை தான் சீரியல் ஷூட்டிங் ஷெட்யூல் இருக்கும். ஆகையால் நான் வெளியே சென்று விடுவேன். திடீரென போன் செய்து ஷூட்டிங் வரவேண்டும் என சொன்னார்கள். உடனடியாக என்னால் வர முடியாத காரணத்தினால் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி ஆளை மாற்றிவிட்டார்கள்.

சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டபோது அவர்கள் கம்யூனிகேஷன் ப்ராப்ளம் என சொல்கிறார்கள். எனக்கு வருத்தமாகவும் வெறுப்பாகவும் இருக்கிறது என ரியா விளக்கம் அளித்துள்ளார்.