கர்ப்பத்தை அறிவித்துள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ரித்திகா தமிழ்ச்செல்வி.
கணேஷ் மீண்டும் உயிரோடு வருவது என கதைக்களம் மாறத் தொடங்கியதால் சீரியலில் இருந்து வெளியேறிய இவர் விஜய் டிவி பிரபலம் ஒருவரையும் திருமணம் செய்து கொண்டார். தற்போது குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வரும் ரித்திகா தனது கர்ப்பத்தை வித்தியாசமாக அறிவித்துள்ளார்.
சில மணி நேரங்களுக்கு முன்னர் இது குறித்து இவர் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று லைக்குகளை குவித்து வருகிறது.