பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து ரேஷ்மா விலக வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபியின் இரண்டாவது மனைவியாக ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரேஷ்மா பசுபுலேட்டி.

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுகிறாரா ரேஷ்மா? புது சீரியலால் எடுக்க போகும் முடிவு என்ன?

ஏற்கனவே இந்த கதாபாத்திரத்தில் ஜெனிபர் நடித்து வந்த நிலையில் அவரது வெளியேற்றத்தால் ரேஷ்மா இந்த சீரியலில் என்ட்ரி கொடுத்தார். இந்த நிலையில் தற்போது இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய சீரியல் ஒன்றில் வெயிட்டான கதாபாத்திரம் கொண்ட வில்லியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வெகு விரைவில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் இந்த புத்தம் புதிய சீரியல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இவர் பாக்கியலட்சுமி தொடரில் தொடர்ந்து நடிப்பாரா? அல்லது விலகிக் கொள்வாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுகிறாரா ரேஷ்மா? புது சீரியலால் எடுக்க போகும் முடிவு என்ன?

என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுகிறாரா ரேஷ்மா? புது சீரியலால் எடுக்க போகும் முடிவு என்ன?