சூர்யாவை எனக்கு சுத்தமாக பிடிக்காது என ஓப்பனாக பேசியுள்ளார் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் சமீபத்தில் குடும்பத்துடன் மும்பைக்கு இடம்பெயர்ந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சைக்குள்ளானது.

புதிய கல்விக் கொள்கை தமிழகத்திற்கு வேண்டாம் என கோஷம் போட்ட சூர்யா தற்போது தன்னுடைய குழந்தைகளை புதிய கல்விக் கொள்கையை பின்பற்றும் மும்பையில் படிக்க வைக்கிறார். கீழடிக்கு சென்ற போது டிக்கெட் வாங்காமல் உள்ளே சென்றது மட்டுமல்லாமல் இவர்கள் கீழடியை பார்க்க வந்ததால் பள்ளி குழந்தைகளை வெயிலில் காக்க வைத்த சம்பவமும் சர்ச்சையாக மாறியது.

மேலும் ஜோதிகா பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்த இருப்பதாகவும் சொல்லப்பட்டு வந்த நிலையில் சூர்யா வடக்கனாக மாறிவிட்டாரா என்றெல்லாம் நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்

இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளர்களில் ஒருவரான அந்தணன் சூர்யா மும்பைக்கு குடியேறினால் என்ன? சூட்டிங் இருக்கும் போது சென்னை வந்து செல்ல போகிறார் அதில் உங்களுக்கு என்ன வலிக்குது என அவரை விமர்சனம் செய்தவர்களுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

அதோடு எனக்கு ஒரு நடிகராக சூர்யாவை சுத்தமாக பிடிக்காது, காரணம் நடிப்பில் ஓவர் ஆட்டிட்யூட் காட்டுவார் என தெரிவித்துள்ளார். அதுவே அவரை ஒரு நல்ல மனிதராக பிடிக்கும். நடிகர்கள் தாங்கள் வாங்கும் சம்பளத்தை எங்கெங்கோ கொண்டு சென்று கொட்டுகிறார்கள். ஆனால் சூர்யா மட்டும்தான் அதில் பெரும் பகுதியை தனது அகரம் பவுண்டேஷனில் செலுத்தி ஐந்தாயிரம் குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார் என தெரிவித்துள்ளார்.