Release Date of Plan Panni Pannanum

பிக் பாஸ் ரியோ ராஜ் நடித்துள்ள பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

Release Date of Plan Panni Pannanum : தமிழ் சின்னத்திரையில் சன்மியூசிக் டிவி தொகுப்பாளராக தன்னுடைய தேர்தல் பயணத்தை தொடங்கியவர் ரியோ ராஜ். அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

மேலும் இவர் வெள்ளித்திரையில் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இருந்தார். இப்படத்தைத் தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசனில் பங்கேற்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பிளான் பண்ணி பண்ணனும் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ரியோ ராஜ் ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். பால சரவணன், தங்கதுரை உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரியோ ராஜ் Fun வீடியோ ஒன்றை வெளியிட்டு படம் திரையரங்குகளில் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார். இதனால் ரியோ ராஜ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.