நடிகை ரெஜினா கசாண்ட்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடல் உடையில் லேட்டஸ்ட்டாக எடுத்திருக்கும் போட்டோ ஷூட் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி ஹீரோயினியாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகை ரெஜினா கசாண்ட்ரா தமிழில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் பரீட்சையமானார்.

அப்படத்தை தொடர்ந்து மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், சிலுக்குவார் பட்டி சிங்கம், மிஸ்டர் சந்திர மௌலி என வரிசையாக பல படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழ் மட்டும் என்று தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ரெஜினா மேலும் பட வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ள தனது சமூக வலைத்தள பக்கங்களில் விதவிதமான ஆடைகளில் போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவார். அந்த வகையில் அவர் வெளியிட்டிருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.