டப்பிங் ஸ்டுடியோவில் செய்யும் சேஷ்டைகளை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் ரீல்ஸ் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்.

தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்பொழுது தமிழில் உதயநிதிக்கு ஜோடியாக ‘மாமன்னன்’ திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தெலுங்கில் தல அஜித்தின் வேதாளம் படத்தின் ரீமேக்கில் உருவாகும் ‘போல ஷங்கர்’ என்கின்ற படத்தில் சிரஞ்சீவி அவர்களுக்கு தங்கையாக நடித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி நானியுடன் இணைந்து ‘தசரா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படி பல மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் இதற்கு இடையில் அவ்வப்போது விதவிதமாக போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது வெளியிட்டு இருக்கும் வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் டப்பிங் ஸ்டுடியோவில் செய்யும் சேட்டைகளை ரீல்ஸ் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்.