பத்து வாரங்களாகியும் இதுவரை நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாத ஒரே நபர் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

பத்து வாரங்களாகியும் இதுவரை நாமினேஷனுக்கு வராத ஒரே நபர்.. பிக் பாஸை கலக்கும் அந்த போட்டியாளர் யார் தெரியுமா??

மொத்தம் 21 போட்டியள்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் கடந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் பட்டியலில் இடம்பெறும் போட்டியாளர்கள் பெரும் ஓட்டுகளில் அடிப்படையில் இந்த எலிமினேஷன் நடந்து வருகிறது. ஆனால் இதுவரை இந்த நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாத ஒரே ஒரு போட்டியாளரும் இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து வருகிறார்.

பத்து வாரங்களாகியும் இதுவரை நாமினேஷனுக்கு வராத ஒரே நபர்.. பிக் பாஸை கலக்கும் அந்த போட்டியாளர் யார் தெரியுமா??

அவர் வேறு யாருமில்லை திருநங்கை போட்டியாளரான சிவின் தான். எல்லா டாஸ்க்களிலும் திறமையாக விளையாடி வரும் சிவின் பிக் பாஸ் வீட்டிற்குள் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் நியாயமான கருத்தை தெரிவித்து வருகிறார். இதனால் இவருக்கு வெளியில் ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி போட்டியாளர்கள் லிஸ்ட்டில் நிச்சயம் சிவின் இருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுவரை நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாத இவர் இனி இடம் பெற்றாலும் முதலாவதாக காப்பாற்றப்படுவார் என ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.