அஜித்தின் திரைப்பயணத்தில் துணிவு படைத்த சாதனை ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்ற திரைப்படம் துணிவு.

எச் வினோத் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் 250 கோடி ரூபாய் வசூலை தாண்டி பெரும் சாதனை படைத்துள்ளது. மேலும் படம் பல்வேறு சாதனைகளை படைத்து வந்த நிலையில் மேலும் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது.

அதாவது அஜித்தின் திரைப்பயணத்தில் முதல்முறையாக 110 கோடி ரூபாய் ஷேர் கொடுத்த திரைப்படமாக துணிவு சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து வசூல் வேட்டையாடி வரும் இந்த படம் விரைவில் 300 கோடி ரூபாய் வசூலை தாண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.