திரிஷாவை தூக்கிட்டு தமன்னாவை போட்டதுக்கு பின்னாடி ஒரு சென்டிமென்ட் இருப்பதாக தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான வலிமை திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக விடாமுயற்சி என்ற திரைப்படம் உருவாக உள்ளது.

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் திரிஷா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க தொடர்ந்து காலதாமதம் ஆகி வருவதன் காரணமாக அவர் இந்த படத்தில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியானது.

இதைத்தொடர்ந்து திரிஷாவுக்கு பதிலாக தமன்னாவை கமிட் செய்ய படக்குழு முழு வீச்சில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. தமன்னாவை இந்த படத்தில் நாயகியாக நடிக்க வைத்த ஒரு சென்டிமென்ட் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

அஜித் தனது படங்களுக்கு தொடர்ந்து வி செண்டிமெண்டில் பெயர் வைத்து வரும் நிலையில் இந்த சென்டிமென்ட் முதல் முதலாக வீரம் படத்தில் தான் தொடங்கியது.

மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தில் நாயகியாக தமன்னா தான் நடித்திருந்தார். அதுவே அதே ஒரு சென்டிமென்டாக வைத்து தமன்னாவை இந்த படத்தில் நடிக்க வைக்க படக்குழு முடிவெடுத்ததாக தெரியவந்துள்ளது.

இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.