கமல் 60 படத்தில் தல அஜித் கலந்து கொள்ளாதது ஏன்? என்ற காரணத்தால் ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
உலக நாயகன் கமல்ஹாசன் திரையுலகில் காலடி எடுத்து வைத்து 60 வருடங்கள் நிறைவடைந்ததை சமீபத்தில் திரையுலக பிரபலங்கள் இணைந்து திருவிழா போல கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் அஜித், விஜய்க்கு அழைப்பு சென்றும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை.
தளபதி விஜய் புதிய படத்தின் ஷூட்டிங் பிஸியாக இருந்து வருவதால் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை என தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்திருந்தது.
மேலும் விஜய்க்கு பதிலாக எஸ்.ஏ.சி அவர்கள் கலந்து கொண்டு கமலை வாழ்த்தினார். தல அஜித் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாததற்கு காரணம் என்ன என்பது இதுவரை தெரியாமலேயே இருந்து வந்தது.
இந்நிலையில் தற்போது தல அஜித்தின் அப்பாவின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தான் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என கூறுகின்றனர்.
ஆனால் அஜித் தரப்பில் இருந்து எந்தவொரு விளக்கமும் வெளிவராததால் இது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை. பொறுத்திருந்து பார்க்கலாம்.