Vijay and Vetrimaran Combo
தளபதி 65 படத்தில் விஜய் டிராக்கை மாற்ற இருப்பதாகவும் அதற்காகவே அவர் வெற்றிமாறனை தேர்ந்தெடுப்பதற்கான காரணம் என்ன என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 64 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து இவர் நிச்சயம் வெற்றிமாறன் கூட்டணியில் தான் நடிப்பார் என கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

என்னது வெற்றிமாறனா? விஜய் ஸ்டைல் வேற வெற்றி மாறனின் டைரக்ஷன் ஸ்டைல் வேற ஆச்சே.. இவர்களுக்கு எப்படி செட்டாகும் என்ற கேள்விகளும் வலுத்து வந்தன.

விஜய்க்கு சும்மா மாஸாக நடித்து வில்லன்களை அடித்து நொறுக்கி போர் அடித்து விட்டதாம், இதனால் டிராக்கை மாற்றலாம் என்று முடிவு செய்து தான் அவர் வெற்றிமாறனுடன் இணைய முடிவெடுத்து இருப்பதாக கூறுகின்றனர்.

ஒரு வேளை இந்த கூட்டணி உறுதியாகி படம் உருவானால் நிச்சயம் அது வெற்றித்தனமான வெற்றியை பெரும் என எதிர்பார்க்கலாம், மேலும் பல காலத்திற்கு பேசப்படும் படமாகவும் அது இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.