வனிதாவின் கணவர் பீட்டர் பல் மரணத்திற்கு காரணம் என்ன குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் வனிதா விஜயகுமார். ஏற்கனவே இரண்டு திருமணம் செய்து விவாகரத்து பெற்ற இவர் மீண்டும் சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கவனம் செலுத்த தொடங்கியதை தொடர்ந்து தனக்கென யூடியூப் சேனல் தொடங்கும் போது அதற்கு உதவியாக இருந்த பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் செய்து கொண்டு ஹனிமூன் சென்றபோது பீட்டர் பால் குடித்துவிட்டு மட்டையான காரணத்தினால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர்.

இதநிலையில் வனிதாவின் கடைசி கணவரான பீட்டர் பால் இன்று உடல் நலக்குறைபாட்டால் காலமானார் என தகவல் வெளியானது. அதிகமான குடிப்பழக்கம் காரணமாக அவரது கல்லீரல் பாதிக்கப்பட்டு அல்சர் ஏற்பட்டு கடந்த சில மாதங்களாகவே சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அவரது உடல்நிலை மிகவும் மோசம் அடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. பீட்டர் பாலின் மரணத்திற்கு வனிதா இரங்கல் கூட தெரிவிக்காமல் இருந்து வருகிறார் எனவும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.