ஃபுட் டெலிவரி செய்யும் பெண்ணாக மாறியிருக்கும் ராஷ்மிகா மந்தனா வீடு வீடாக சென்று தனது பான்ஸ்க்கு ஃபுட் டெலிவரி செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் ஒரு சில மொழிகளிலும் பிசியாக படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில் அவர் ஒரு சில விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார். அதில் அவர் விளம்பரப்படுத்திய ஒரு உணவு பொருளை ரசிகர்கள் அதிக விரும்பி வாங்கி வருகிறார்கள். என்பதால் அதனை ஒரு தனியார் உணவகத்தில் ராஷ்மிகா மீல் என்று விற்பனை செய்து வருகின்றனர். அந்த உணவை அதிக ரசிகர்கள் விரும்பி வாங்கி வருவதால் அவர்களுக்கு ராஷ்மிகா ஒரு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்துள்ளார்.

அதாவது தனது பெயரை வைத்திருக்கும் உணவை விரும்பி சாப்பிடும் தனது ரசிகர்களின் ரியாக்ஷன்ஸ் மற்றும் சந்தோஷத்தை தான் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் ஃபுட் டெலிவரி செய்யும் பெண்ணாக தனது ரசிகர்களுக்கு நேரில் சென்று அவர்கள் ஆர்டர் செய்த ராஷ்மிகா மீல்லை டெலிவரி செய்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

அவரை நேரில் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் அனைவரும் சந்தோஷத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் செல்பி புகைப்படங்களை எடுத்து வந்தனர். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.