நடிகர் விக்ரம் நடிக்க இருக்கும் சீயான் 61 திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இது குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர்தான் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான புஷ்பா தி ரைஸ் திரைப்படத்தின் மூலம் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ராஷ்மிகா தற்பொழுது தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்க இருக்கும் சீயான் 61 திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சீயான் 61 திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பயணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.