வாரிசு சூட்டிங்கில் ராஷ்மிகா தூங்கி வழிய இயக்குனர் செய்த வேலையை குறித்து பதிவு செய்துள்ளார்.

Rashmika About Fun Moments in Varisu Shooting : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் வாரிசு. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் ராஷ்மிகா மந்தனா.

தெலுங்கு திரை உலகில் கொடி கட்டி பறந்து வரும் இவர் தற்போது ரசிகர்களுடன் உரையாடுவது வாரிசு படத்தில் நடந்த சுவாரஸ்யமான விஷயம் குறித்து கேட்க ராஷ்மிகா மந்தனா பதிலளித்துள்ளார்.

இது குறித்து அவரது பதிவில் ஒருநாள் ஷூட்டிங்கில் சோபாவில் உட்கார்ந்து அப்படியே தூங்கிவிட்டேன். இதைப் பார்த்த இயக்குனர் வம்சி நான் தூங்குவதை போட்டோ எடுத்து அதை விஜய் சாரிடம் காட்டிவிட்டார். அந்த தருணம் எங்களுக்குள் செம ஃபன்னாக இருந்தது என தெரிவித்துள்ளார்.

ராஷ்மிகா கூறிய இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.