Ajith in Unseen Video

விமானநிலையத்தில் அனைவருக்கும் கை கொடுத்து அன்பை பரிமாறி உள்ளார் தல அஜித்.

Rare Video of Thala Ajith : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ஆனாலும் படக்குழு ஒன்றரை வருடமாக எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடாமல் அமைதியாகவே இருந்து வருகிறது.

இதனால் அஜீத் ரசிகர்கள் தல அஜித்தின் பழைய வீடியோக்களையும் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது தல அஜித் விமான நிலையத்தில் அங்கிருந்த ரசிகர்கள் அனைவருக்கும் கை கொடுத்து அன்பை பரிமாறிய அழகிய வீடியோ ஒன்றை அஜித் ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர்.

புன்சிரிப்புடன் தல அஜித் தன்னுடைய ரசிகர்களுக்கு கைகொடுத்த வீடியோ ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

இதோ அந்த வீடியோ