விஜயின் ரஞ்சிதமே பாடலுக்கு ஒரு சிறுமி அசத்தலாக டான்ஸ் ஆடியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் உருவாகும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்து வரும் இப்படம் அடுத்த ஆண்டு வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது. தமன் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே பாடல் அண்மையில் வெளியாகி இணையதளத்தில் சூப்பர் ஹிட் அடித்து வரும் நிலையில் இப்பாடலுக்கு பலரும் ரிலீஸ் வீடியோ செய்து இணையத்தை அதிர விட்டு வருகின்றனர்.

ரஞ்சிதமே பாடலுக்கு அசத்தலாக டான்ஸ் ஆடிய சிறுமி!!… இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ இதோ!.

அந்த வகையில் இப்பாடலுக்கு சரியான ஸ்டெப்புகளுடன் பக்காவாக டான்ஸ் ஆடி இருக்கும் ஒரு சிறுமியின் அசத்தலான வீடியோ இணையத்தை தெறித்து விட்டு வருகிறது. இதற்கு சோ க்யூட், வேற லெவல் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இதுக்கு உங்க கருத்து என்னன்னு மறக்காம சொல்லுங்க.