நடிகை ரம்யா பாண்டியன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஸ்லீவ்லெஸ் சுடிதாரில் சும்மா நச்சுனு இருக்கும் க்யூட் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார்.

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர்தான் ரம்யா பாண்டியன். தமிழில் ஜோக்கர் என்னும் படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் மட்டும் நடித்திருந்தார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற ரம்யா பாண்டியன் அதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

இந்நிகழ்ச்சியின் மூலம் பல ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்த இவர் மேலும் ஒரு சில படங்களில் தற்போது நடித்தும் வருகிறார். இதற்கிடையில் தனது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது கிளாமரான உடைகளில் போட்டோ ஷூட் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவார். அந்த வகையில் ரம்யா பாண்டியன் சமீபத்தில் மிகவும் கவர்ச்சியாக உள்ளாடையுடன் போட்டோஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது ஸ்லீவ்லெஸ் சுடிதாரில் சும்மா நச்சுன்னு இருக்கும் லேட்டஸ்ட் புகைபடங்களை பதிவிட்டு ரசிகர்களை கவனத்தை ஈர்த்துக் ஈர்த்து வருகிறார்.