Ramya Krishnan Update
Ramya Krishnan Update

Ramya Krishnan Update – 48 வயதில் ஆபாச நடிகையாக அவதாரம் எடுத்துள்ளார் ரம்யா கிருஷ்ணன்.

தமிழ் சினிமாவில் நாயகியாக, வில்லியாக, பிரம்மாண்ட பட நடிகையாக நடித்து ரசிகர்களை பிரமிக்க வைத்து வருபவர் ரம்யா கிருஷ்ணன்.

48 வயதாகும் இவர் தற்போது விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில் போர்ன் ஸ்டாராக நடித்துள்ளார்.

இது குறித்து படத்தின் இயக்குனரான தியாகராஜா குமார ராஜா அவர்கள் கூறியதாவது, இந்த படத்தில் போர்ன் ஸ்டாராக நடிக்க முதலில் நதியாவை தான் அணுகினோம்.

ஆனால் அவர் ஓகே சொல்லாததால் ரம்யா கிருஷ்ணனை அணுகினோம். வித்தியாசமான கதாபாத்திரம் என்பதால் இப்படத்தில் நடிக்க ஒப்பு கொண்டார் என கூறியுள்ளார்.

ரம்யா கிருஷ்ணன் சூப்பர் டீலக்ஸ் மட்டுமில்லாமல் பார்ட்டி, தேவ், வந்தா ராஜாவாக தான் வருவேன் என பல படங்களில் நடித்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.