காவாலா பாடலுக்கு ரீல்ஸ் செய்த ரம்யா கிருஷ்ணனின் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன். 80ஸ், 90ஸ் காலகட்டத்தில் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருந்த இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் இப்படத்தில் அனிருத் இசையமைப்பில் தமன்னாவின் கவர்ச்சி நடனத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து இணையதளத்தை தெறிக்க விட்டு வரும் “காவாலா” பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார். அதன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.