கார் விபத்து குறித்து நடிகை ரம்பா உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்பா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து வந்த இவர் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன இந்த நிலையில் தற்போது நடிகை ரம்பா கனடாவில் குழந்தைகளை ஸ்கூலிலிருந்து காரில் அழைத்து வரும்போது விபத்தில் சிக்கியதாக போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இவரும் மூத்த மகளும் சிறு காயங்களுடன் தப்பிய நிலையில் இளைய மகள் மட்டும் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிய வந்துள்ளது. இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வந்ததை தொடர்ந்து நடிகை ரம்பா தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர், நானும் எனது மகளும் தற்போது நலமாக இருக்கிறோம். எங்களுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. நான் மிகவும் கொடுத்து வச்சவபோல் உணருகிறேன். எனக்கு சொல்வதற்கு வேறு வார்த்தைகள் எதுவும் இல்லை என்று பதிவிட்டிருக்கிறார்.

https://www.instagram.com/reel/CkblGfPgY_n/?igshid=YmMyMTA2M2Y=