தெலுங்கு நடிகையான ரகுல் பிரீத் சிங் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, என்னமோ ஏதோ, ஸ்பைடர் ஆகிய படங்களில் நடித்து தமிழிலும் பிஸியான நடிகையாகி விட்டார்.
இவர் தற்போது சூர்யாவுடன் என்.ஜி.கே படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் நடிகர் கார்த்தி, சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்களிலும் நாயகியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது ரகுல் ப்ரீத் சிங் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். இதனையடுத்து தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.