ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் ட்ரெண்டிங்காகி வருகிறது.

Rakul Preet Singh latest photos viral:

தென்னிந்திய திரை உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக திகழ்பவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, NGK, தேவ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து அனைவருக்கும் பரிச்சயமான இவர் தற்போது தெலுங்கு மற்றும் பாலிவுட் திரை உலகில் பிசியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் தமிழில் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் அயலான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருக்கும் ராகுல் ப்ரீத் சிங் அவ்வப்போது சமூக வலைதள பக்கங்களிலும் விதவிதமான போட்டோஸ் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் வெள்ளை நிற ஆடையில் கண்ணை கவரும் விதமாக லேட்டஸ்ட்டாக எடுத்திருக்கும் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். அது தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.