வாரிசு திரைப்படத்தின் ரஞ்சிதமே பாடல் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை கடந்து இணையதளத்தில் மாஸ் காட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் தளபதி விஜய். ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் இவர் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வரும் ‘வாரிசு’ திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்க தமன் இசையமைத்திருக்கிறார்.

இதில் தமன் இசையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான ரஞ்சிதமே பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களை சூப்பராக குத்தாட்டம் போட வைத்து இணையத்தை கலக்கி வரும் நிலையில் இப்பாடல் குறித்த மகிழ்ச்சியான தகவலை படக்குழு பகிர்ந்துள்ளது. அதன்படி, ரஞ்சிதமே பாடல் சமூக வலைதளத்தில் 90 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.