ரஞ்சிதமே பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட ரசிகர்கள் வீடியோ வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் ரசிகர்களால் அன்போடு தளபதி என்று அழைக்கப்பட்டு வரும் தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு “வாரிசு” திரைப்படம் வெளியாகி உள்ளது. வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த இப்படம் தற்போது மாபெரும் வெற்றி பெற்று வரும் நிலையில் இப்படத்தில் தமன் இசையமைப்பில் உருவாகி இணையதளத்தில் பட்டையை கிளம்பி இருந்த ரஞ்சிதமே பாடலை திரையரங்குகளில் ரசிகர்கள் வேற லெவலில் கொண்டாடி அதிர வைத்திருக்கும் வீடியோ வெளியாகி இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது.