மாஸ் கிளப்பும் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் ப்ரோமோ வீடியோவை வாரிசு படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு.

மாஸ் கிளம்பும் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் ப்ரோமோ.. வாரிசு படக்குழு வெளியிட்ட வீடியோ

வரும் 2023 பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்தில் இருந்து இதுவரை மூன்று லுக் போஸ்டர்கள் வெளியாகி உள்ளன. மேலும் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் இந்த மாதத்தில் வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில் இன்று காலை மாலை 6.30 மணிக்கு சிங்கிள் ட்ராக் ப்ரோமோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

மாஸ் கிளம்பும் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் ப்ரோமோ.. வாரிசு படக்குழு வெளியிட்ட வீடியோ

அதன்படி தற்போது படக்குழு பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இதில் நாளை மறுநாள் ( நவம்பர் 5 ) ரஞ்சிதமே என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியாகும் என அறிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.