நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்துடன் இணைந்து எடுத்திருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய திரை உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இறுதி கட்டத்தை நெருங்கியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கொச்சினில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைவர் ரஜினிகாந்த் தனது செல்ல மகள் சௌந்தர்யா ரஜினிகாந்துடன் இணைந்து கலந்து கொண்டுள்ளார். அதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அந்நிகழ்ச்சிக்காக நியூ லுக்கிங் கேஷுவலாக தயாராகி இருக்கும் அப்பா ரஜினிகாந்த் உடன் எடுத்துக் கொண்டுள்ள அன்பான புகைப்படங்களை மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து ட்ரெண்டிங்காகி வருகிறது.