நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் விடுதலை திரைப்படத்தை பாராட்டி பகிர்ந்து இருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அனிருத் இசையமைப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பல மொழி உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விடுதலை திரைப்படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பகிர்ந்திருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.

அதில் அவர், இதுவரை தமிழ் திரை உலகம் பார்த்திராத புதிய கதைக்களம் விடுதலை. இதில் சூரியின் நடிப்பு அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது. இளையராஜாவின் இசை என்றும் ராஜா தான். வெற்றிமாறன் தமிழ் திரை உலகிற்கு பெருமை. இரண்டாம் பாகத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். என தெரிவித்திருக்கிறார்.