rajinikanth to manju warrier here the salary details of vettaiyan movie actor and actress..
rajinikanth to manju warrier here the salary details of vettaiyan movie actor and actress..

‘ஜெய்பீம்’ பட டைரக்டர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிரட்டும் படம் வேட்டையன். இப்படம் சரஸ்வதி பூஜைக்கு முதல் நாளான 10-ந்தேதி ரிலீஸ் ஆகிறது.

பகத் பாசில், அமிதாப் பச்சன், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன், விஜய் டிவி தொகுப்பாளர் ரக்‌ஷன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், வேட்டையன் படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகளின் சம்பள விவரம் பார்ப்போமா..

‘வேட்டையன்’ படத்துக்காக நடிகர் ரஜினிகாந்த் ரூ.125 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறார். கடைசியாக அவர் நடித்த ஜெயிலர் படத்துக்காக ரஜினிக்கு ரூ.110 கோடி சம்பளமாக வழங்கப்பட்ட நிலையில், வேட்டையன் படத்துக்கு அதைவிட ரூ.15 கோடி கூடுதலாக வாங்கி இருக்கிறார் ரஜினி.

ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ரூ.110 கோடி சம்பளம் வழங்கப்பட்டது மட்டுமின்றி, படத்தின் லாபத்தில் இருந்து ரூ.100 கோடி ஷேரும் வழங்கப்பட்டது.

நடிகர் விஜய்யோடு ஒப்பிடுகையில் ரஜினிக்கு மிகவும் கம்மியான தொகையே சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது. விஜய் தற்போது நடித்து வரும் தளபதி 69 படத்துக்காக ரூ.275 கோடி சம்பளமாக வாங்கி உள்ள நிலையில், அவரைவிட 150 கோடி கம்மியாக சம்பளம் வாங்கி இருக்கிறார் ரஜினிகாந்த்.

ரஜினியை தொடர்ந்து வேட்டையன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நடிகை மஞ்சு வாரியருக்கு ரூ.2 முதல் 3 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாம்.

அதேபோல் நடிகர் பகத் பாசிலுக்கு ரூ.4 கோடியும், பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் ரூ.7 கோடியும், ராணா டகுபதி ரூ.5 கோடியும், நடிகை ரித்திகா சிங்கிற்கு ரூ.25 லட்சமும் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கலை, கடமை, அர்ப்பணிப்பு என இருந்தாலும், காசு முக்கியம்ல..