அண்ணாத்த திரைப்படம் வசூலில் சொதப்பியதால் அடுத்த படத்திற்கான சம்பளத்தை குறைத்துக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Rajinikanth Reduced Salary for Next Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான திரைப்படம் அண்ணாத்த.

‘புதிய கோச்சர்’ டிராவிட், இந்திய அணியை மேலும் பலப்படுத்துவாரா? : காம்பீர் விளக்கம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதேசமயம் பல படங்களின் கலப்படமாக இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இதனால் ரஜினியின் முந்தைய படங்களை காட்டிலும் அண்ணாத்த படத்தின் வசூல் சற்று குறைந்ததாக சொல்லப்படுகிறது.

எனக்கு ஏன் இவ்ளோ பெரிய build-up கொடுக்கிறீங்க! – அரங்கை அதிர விட்ட Yuvan ரசிகர்கள்! | Maanaadu HD

இதன் காரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய அடுத்த படத்திற்காக தன் சம்பளத்தில் 30 கோடி ரூபாய் வரை குறைத்துக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை சிறுத்தை சிவா இயக்கலாம் என சொல்லப்படுகிறது. அல்லது தேசிங்கு பெரியசாமி இயக்கவும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.