நடிகர் ரஜினிகாந்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் ரசிகர்கள் மத்தியில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெய்லர் திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் ஆக்சன் திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், சுனில் உள்ளிட்ட பல உச்ச நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இதனால் இப்படம் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் கருப்பு நிற சட்டையில் கம்பீரமாக இருக்கும் நடிகர் ரஜினியின் லேட்டஸ்ட்டான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.